Sunday, January 31, 2010

உன் கையால் மாலையிடு !!!!!!!!!!!!
உறவுகள் ஏழு
ஜென்மம் தொடரும்
என்னும் உண்மை
உணர்வாயா?
நான் எடுக்கும் பிறவி
யாவிலும் எந்தன்
உறவாய்த் தொடர்ந்து
வருவயா????

அமிலம் தன்னில்
தாது கரைந்தால்
அதிலே எழுவது மின்சக்தி....
உன் அன்பில் நாளும்
கரைந்து,கரைந்து
அறிந்து கொண்டேன்
என் சக்தி!

நீயும் , நானும்
கைகள் கோர்த்து
நடந்த நாட்கள்
மறந்தாயா?
உன் நினைவில் வாடிக்
கரையும் என்னை
நிற்கதியாக
விடுவாயா?


அன்பே உந்தன்
ஆஸ்தியை அல்ல
எந்தன் இதயம்
நேசிப்பது!!
நான் அல்லும், பகலும்
இறைவனிடத்தில்
உன்னைத் தானே
யாசிப்பது!!!!

உன்னிடம் சொல்ல
ஆயிரம் கதைகள்
எனக்குள் கோடி
ஒளிந்திருக்கும்!
நீ நேரில் வந்து
நின்றால் போதும்
எல்லாம் நொடியில்
மறந்திருக்கும்!!

உனக்கும் இந்த
மறதி வரலாம்!
உடனே ஒடி
வந்துவிடு!
ஏழு ஜெமம் வாழ
கழுத்தில் கையால்
மாலையிடு!!!!!!

Monday, January 11, 2010

உனக்காய் ஒரு கவிதை!!
    என் உயிர் காதலியே
    எந்தன் உயிரின்
    உயிரற்ற நிலையை
    காதலினால் மீட்டு தந்தவளே!!

    உனக்கான கவிதையின்
    முயற்சிகளில்
    மென்மையான வார்த்தைகளை
    இனிமையான நினைவுகளின் 
    அறைகளிலிருந்து எடுக்கும்போது
    நினைவுகள் ஏனோ
    வார்த்தைகளை விட்டுவிட்டு
    உன்னை சுற்றியே
    மையம் கொள்கிறதடி!!!

    எத்தனை  கவிதை
    எழுதினாலும்
    அவை  உன்னைவிட
    பரவசம் தருவதில்லை
    பெண்ணே!!
    கவிதை திரும்ப திரும்ப
    படித்தால்
    சுவை குறைந்துவிடும்..
    உன்னை ஒவ்வொரு முறை
    பார்க்கும்போதும்
    இன்னும் இன்னும்
    ரசிக்க தோன்றும்!!

    உன்னை காதலித்ததால்
    கவிதை எழுதவில்லை
    ஒரு கவிதையைத்தான்
    காதலித்துக் கொண்டிருக்கிறேன்!!

    நாம் வாழ்வில்
   இணையும் நாள்
   எதிர்பார்த்து
   என்றும் காதலுடன்
   உன் காதலன்!!!
   
   
   

Tuesday, January 5, 2010

மனதை அதிர வைத்த காதல் கதை:(

ஒரு  அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட

தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக்

கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர்

மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர்

துறந்தான்.

உடனே அந்தப்

பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய

காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள்.

இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்

கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப்

போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்

அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"

என்றது.இதைப் படித்ததும் உடனே

என்னை

உதைக்கத் தோணுமே உங்களுக்கு!

நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

இருக்கேன்...........